என்னைப்பற்றி

வணக்கம் நண்பர்களே! உறவுகளே!!

சட்டத்துறையில் இலங்கையில் பணிபுரிந்த நான் இன்று லண்டனில் வாழ்கின்றேன்.

எனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்யும் தளமாக இது இருக்கும்.

நான் எந்த அரசியலும் இல்லாமல் சுயேட்சையாக இயங்கும் ஒருவன். இந்த சமுதாயத்தின் ஒரு பிரதிநிதி.

இந்தத் தளமும் அவ்வாறே இருக்கும்.

அரசியல் இல்லாமல் எம்மை சுற்றி  நடப்பதை  ஒரு  தனிநபர், மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதாகவே சகல விடயமும் பதியப்படும். அவர்களின் கருத்தாகவே இது இருக்கும்.

இது அரசியல் தளம் அல்ல. சகல துறைகளிலும் எனது எண்ணப்பதிவாக, கருத்துப்பதிவாக, பார்வையாக இருக்கும்.

அது  தவிர, பல  இணையத்  தளங்களின் இணைப்புக்களையும் ஒரு அகராதி போல நீங்கள் பார்க்கலாம்; பாவிக்கலாம்.

தினமும் நான் இணையத்தில் வலம்வரும்போது சந்திக்கும் சகல பயனுள்ள இணையங்களையும் இதில் இணைத்துக் கொண்டே இருப்பேன்.

யாருக்கும் எதிராகவோ, அல்லது ஆதரவாகவோ இது இருக்காது. அவ்வாறு எதுவும் யாராலும் கருதப்படவும் கூடாது.

இது எம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பற்றிய மக்களின் கருத்துக்கள் மட்டுமே.

ஆகவே, ஈழத் தமிழர்களுக்கும், பொதுவாக இந்த மனித குலத்துக்கும் நல்லது நடக்க வேண்டும் என நினைக்கும், அதற்காகச் செயற்படும் அனைவரும் எனக்கு நண்பர்களே; உறவுகளே.

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பதிவு செய்யலாம் அல்லது ஈ-மெயில் ஊடாக தெரிவிக்கலாம். அனைத்தும் வரவேற்கப்படும்.

'உனது கருத்துடன் நான் உடன்படாவிட்டாலும், உனக்கு கருத்து தெரிவிக்கவுள்ள உரிமைக்காக உன்னுடன் இணைந்து நானும் போராடுவேன்.'

நன்றி நண்பர்களே! உறவுகளே!!

மீண்டும் சந்திப்போம்; கலந்து சிந்திப்போம்.

இப்படிக்கு,

அன்புடன்

பரம் ஸ்ரீஜி